[X] Close

11ஆவது ஆண்டாக ஊதியத்தை உயர்த்திக் கொள்ளாத முகேஷ் அம்பானி!

Mukesh-Ambani-keeps-salary-capped-at-Rs-15-cr-for-11th-yr-in-a-row

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மு‌கேஷ் அம்பானியின் ஊதியம் 11ஆவது ஆண்டாக உயர்த்தப்படாமல் 15 கோடி ரூபாயாகவே உள்ளது. 

இந்தியாவிலுள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். பெரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கான ஊதியம் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தபோது, 2009ஆம் ஆண்டு, ரிலையன்ஸ் அம்பானி தனது ஊதியம் உள்ளிட்ட இதரபடிகளையும் சேர்த்து 15 கோடி ரூபாயாக தானாகவே நிர்ணயம் செய்துகொண்டார். 


Advertisement

அப்போதிலிருந்து தற்போது வரை அவரது இதர படிகளையும் சேர்த்த ஊதியம் 15 கோடி ரூபாயாகவே உள்ளது. அதேநேரம், ரிலையன்ஸ் நிறுவனத்தில் முழு நேர இயக்குநர்களாக பணிபுரியும் முகேஷ் அம்பானியின் உறவி‌னர்களின் ஊதியம்‌ அவரது ஊதியத்தை விட கூடுதலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close