[X] Close

கேரளாவில் கனமழை: கன்னூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு

Heavy-Rain-in-Kerala

கேரளாவில் கனமழை காரணமாக கன்னூர் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன்னூர் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மீட்புப் படையினர் படகுகள் மூலம் ‌மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.


Advertisement

கனமழை காரணமாக பம்பலா அணை, மலக்கன்காரா அணையும் நேற்று திறக்கப்பட்ட நிலையில், இன்று கல்லார்குட்டி அணையும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 நாட்களுக்கு இடுக்கி, கன்னூர், கோழிக்கோடு, மலப்புரம், வயநாடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ரெட் மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close