Published : 12,May 2017 10:12 AM

ஸ்ரீதேவி சினிமாவுக்கு வந்து இவ்ளோ வருஷமாச்சா?

actress-sri-devi-completed-50-years-in-cinema-field

இந்திய சினிமாவில் ஸ்ரீதேவிக்கு தவிர்க்க முடியாத இடம் இருக்கிறது. தமிழில் தொடங்கி இந்திக்கு சென்ற ஸ்ரீதேவி, ஹீரோக்களுக்கு இணையாக அங்கு பேசப்பட்டார். இந்தி சினிமாவின் பெண் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவிக்கு ஆகஸ்ட் வந்தால் 54 வயது!

நான்கு வயதிலேயே நடிக்க வந்துவிட்ட அவருக்கு சினிமாவில் இது 50 வது வருடம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என நடித்துள்ள ஸ்ரீதேவி, தற்போது நடித்துள்ள படம், ’மம்’. இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாக இருக்கிறது.

தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் கூறும்போது, ‘ இந்தியாவின் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். இந்தியா முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறது. இந்தப் படத்தின் டீசரைப் பார்த்துவிட்டு தென்னிந்திய விநியோகஸ்தர்கள் டப் செய்து வெளியிடச் சொன்னார்கள். அதனால் இந்தி தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் வெளியிடுகிறோம்’ என்றார்.

ஸ்ரீதேவி சினிமாவில் அறிமுகமான படம், எம்.ஏ.திருமுகம் இயக்கிய ‘துணைவன்’. இந்தப் படம் 1967, ஜூலையில் வெளியானது. அந்தப் படம் வெளியான நாளில் அவரது 50 வது படமான ’மம்’ படத்தையும் வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்