தருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகைக்கான பயோமெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தக் கருவியின் பழைய பதிப்பில் ஆங்கில மொழி மட்டுமே இருந்தது.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக்கின் பதிப்பு மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயோமெட்ரிக் கருவிகளில் ஆங்கிலத்துடன், இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அஞ்சலகத் தேர்வில் தமிழ் சேர்க்கப்படாததால், எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி சேர்க்கப்பட்டிருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி