Published : 18,Jul 2019 01:31 AM
இன்றைய முக்கியச் செய்திகள் சில...

உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பான தீர்ப்புக்கு மத்தியில் கர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காததால் காங்கிரஸ் மதச்சார்பற்ற கூட்டணி அரசு கவிழ்வதற்கு வாய்ப்பு உள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்துகிறார்.
ஒரே இரவில் கள்ளக்குறிச்சி மற்றும் ஸ்ரீவைகுண்டம் அருகே 2 கோர விபத்துகள் நடந்துள்ளன. இதில் மொத்தமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் காணாமல் போன பெண் மதுராந்தகம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கொலை செய்து உடலை சாக்குமூட்டையில் கட்டி கிணற்றில் வீசியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.