[X] Close

“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே

Request-for-approval-has-not-been-answered-for-8-months--southern-railway

சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையில் ரயில்கள் செல்லும்போது கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் கான்கிரீட் ஸ்லாப் அமைக்கும் முடிவிற்கு ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதிலில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் தலைமை செயலகம் அமைந்துள்ள ராஜாஜி சாலையில் ரிசர்வ் வங்கி எதிரே, மேலே ரயில்கள் செல்லும் வகையில் சுரங்கபாதை
அமைக்கப்பட்டுள்ளது. விரைவு ரயில்களில் செல்லும் பயணிகள் கழிவறைகளை பயன்படுத்தும்போது, சுரங்கபாதையில் சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது கழிவுகள் விழுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.


Advertisement

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என வழக்கறிஞர் என்.எஸ்.சிவக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ரயில்கள் செல்லும்போது கழிவுகள் கொட்டுவதைத் தடுக்கும் கான்கிரீட் ஸ்லாப் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாவும், அதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையரிடம் ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதிலில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் 4 மாதத்தில் பணிகளை முடிக்க தயாராக இருக்கிறோம் எனவும் தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்பட்டது. இதனையடுத்து ரயில்வே கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் ஒரு வாரத்தில்
விளக்கம் அளிக்க சென்னை மாவட்ட ஆட்சியருக்கும், போக்குவரத்து காவல் துறைக்கும் உத்தரவு பிறப்பித்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close