Published : 17,Jul 2019 07:10 AM

திருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்

Man-gives-triple-talaq-within-24-hours-of-marriage

உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்கப்படாததால் திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணிற்கு ஒருவர் முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஷாஹே ஆலம். இவருக்கும் ருக்சனா பனோ என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜூலை 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பு கூறியபடி, பெண் வீட்டார் வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்காததால், திருமணமான 24 மணி நேரத்தில் ருக்சனாவுக்கு முத்தலாக் கூறி ஆலம் விவாகரத்து செய்துள்ளார். 

இதனால், மணப்பெண்ணும், பெண் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து, பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் ஆலம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். விசாரணை முடிவடைந்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்