[X] Close

நாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்கள் யார்? யார்? - பட்டியல் கேட்ட மோடி

---Give-me-names-by-evening-----Upset-PM-Modi-on-absentee-BJP-ministers

நாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் பட்டியலை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலக கட்டத்தில் இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரகாத் ஜோஷி, ஜெய் சங்கர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

               


Advertisement

இந்தக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பிக்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் வருகை குறித்து கேட்டறிந்தார். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வராத மத்திய அமைச்சர்களின் பட்டியலை இன்று மாலைக்குள் கொடுக்குமாறும் பிரதமர் மோடி கேட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களில் பாஜக எம்.பிக்கள் முறையாக பங்குபெற வேண்டும் என்று தொடக்கம் முதலே மோடி வலியுறுத்தி வருகிறார். இன்றைய கூட்டத்திலும் மீண்டும் அதனை அவர் வலியுறுத்தினார்.


Advertisement

Advertisement
[X] Close