[X] Close

சச்சின் தேர்வு செய்த அணியில் தோனிக்கு இடமில்லை!

Sachin-Tendulkar-picks-his-team-of-the-tournament---no-MS-Dhoni

உலகக் கோப்பைத் தொடருக்கு பின், சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்த அணியில், ’தல’ தோனிக்கு இடமில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர், இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதன் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் டை ஆனதை அடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அந்த ஆட்டமும் டை ஆனதால், அதிக பவுண்டரி அடித்த அணியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அணி, உலகக் கோப்பையை முதன் முறையாகக் கைப்பற்றியது.


Advertisement

இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு 11 பேர் கொண்ட ஓர் அணியை, சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை தனது அணிக்கும் கேப்டனாக நியமித்துள்ள சச்சின், அணியில் 5 இந்திய வீரர்களையும் சேர்த்துள்ளார். ஆனால், அனுபவ வீரர் தோனிக்கு இடமில்லை.

சச்சின் தேர்வு செய்த அணி விவரம்:
கனே வில்லியம்சன் (கேப்டன்), ரோகித் சர்மா, பேர்ஸ்டோ (விக்கெட் கீப்பர்), விராத் கோலி, ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக் ஸ், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இந்த அணியில், தோனிக்கு இடம் இல்லாததால், அவர் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close