[X] Close

என்ன ஒரு புத்திசாலித்தனம்? ரவுடிகள் சொன்ன பகீர் விளக்கம்!

pudhucherry-murder

கொலைச் செய்துவிட்டு தலையை போலீஸ் ஸ்டேஷனில் வீசிச் சொன்றது ஏன் என்பதற்கு விளக்கம் அளித்துள்ளனர் கைது செய்யப்பட்ட ரவுடிகள்.


Advertisement

புதுச்சேரி மாநிலம் பாகூரை அடுத்த குடியிருப்பு பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுவேதன் (வயது 17). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த சுவேதன் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்நிலையில் பாகூர் ஏரிக்கரை அருகே சுவேதன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலைக் கைப்பற்றி தலையை தேடினர். அப்போது, வெட்டப்பட்ட தலையை புதுச்சேரி எல்லையில் இருக்கும் ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் ஒரு கும்பல் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்தக் கொலையை செய்ததாக வினோத், தாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளது தெரிய வந்தது.

கொலை செய்யப்பட்ட சுவேதனின் தலையை ரெட்டிச்சாவடி காவல்நிலையத்தில் வீசிச் சென்றது ஏன்? என்பது குறித்து கொலையாளிகள் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். கடலூரில் கைது செய்யப்பட்டால், அனைத்து வசதிகளும் கிடைக்கக்கூடிய அங்குள்ள சிறையிலேயே அடைக்கப்படுவோம் என்பதால்தான், கொலையாளிகள் இவ்வாறு செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராஜீவ் ரஞ்சன் விளக்கினார்.


Advertisement
Related Tags : pudhucherry murdermurder

Advertisement

Advertisement
[X] Close