(கொலை செய்யப்பட்ட ஆனந்த்)
தன்பால் உறவுக்கு மறுத்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். வயது 20. இவருக்கு வாட்ஸ்ஆப் குரூப் மூலம் நாட்றம்பள்ளியை சேர்ந்த பாலாஜி (வயது 23), கார்த்திக் (வயது 22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கடந்த மாதம் 13-ம் தேதி அன்று நாட்றம்பள்ளிக்கு வர சொல்லி கார்த்திக், ஆனந்துக்கு அழைப்பு விடுத்து உள்ளார்.
(கொலை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள்)
நண்பரின் அழைப்பை ஏற்று அவர்கள் கூறிய இடத்திற்கு ஆனந்தும் சென்றுள்ளார். அப்போது ஆனந்தை தன்பால் உறவில் ஈடுபட பாலாஜி மற்றம் கார்த்திக் ஆகிய இருவரும் வற்புறுத்தியுள்ளனர். ஆனால் தன்பால் உறவில் ஈடுபட ஆனந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து கடும் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் பாலாஜி ஆனந்தை கொலை செய்து பச்சூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்று உள்ளனர்.
முதலில் பிரேதத்தை கைப்பற்றிய ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், தற்கொலையாக இருக்கலாம் என விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில் தான் பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆனந்த் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஆனந்துடைய செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்தபோது, இந்த இருவரும் இணைந்து இக்கொலையை செய்தது தெரிய வந்தது. எனவே இருவரும் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.
Loading More post
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்