Published : 15,Jul 2019 02:37 AM
திமுகவில் இணைகிறார் வேலூர் ஞானசேகரன்

வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, சி.ஞானசேகரன், திமுகவில் இன்று இணைகிறார்.
வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சி.ஞானசேகரன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் அமமுகவில் இணைந்தார். பின் அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து அவர் திமுகவில் இணைகிறார். அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகி வரும் நிலையில் ஞானசேகரனும் அந்தக் கட்சியில் இருந்து விலகுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.