[X] Close

71 ரன்களில் 3 விக்கெட்டுகள் : தடுமாறும் இங்கிலாந்து

New-Zealand-vs-England--Final---England-loss-3-Wickets-in-71-Runs

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 71 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியவர்களில் குப்தில் 19 (18) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த நிகோல்ஸ் மற்றும் கேப்டன் வில்லயம்சன் பொறுமையான ஆட்டத்தை விளையாடினர். 30 (53) ரன்களில் வில்லியசன் வெளியேற பின்னர் வந்த ராஸ் டைலர் 15 (31) ரன்களில் நடையைக் கட்டினார். 

இதற்கிடையே அரைசதம் அடித்த நிகோல்ஸ் 55 (77) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் வந்த டாம் லதாம் 47 (56) ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியில் பிளங்கெட்  மற்றும் கிரிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 


Advertisement

இதையடுத்து 242 என்ற இலக்கை எதிர்த்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜாசன் ராய் 17 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து அனுபவ வீரர் ஜோ ரூட் 30 பந்துகளில் 7 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆனார். பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பேர்ஸ்டோவ் 36 (55) ரன்களில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 71 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்தது. தற்போது கேப்டன் இயான் மார்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close