ஷூட்டிங்கில் ஜானி டெப் செய்த அட்டகாசம்

ஷூட்டிங்கில் ஜானி டெப் செய்த அட்டகாசம்
ஷூட்டிங்கில் ஜானி டெப் செய்த அட்டகாசம்

பைரட்ஸ் ஆப் தி கரீபியன் தொடரின் ஐந்தாம் பாகமான ‘டெட் மேன் டெல் நோ டேல்ஸ்’ படத்தின் ஷூட்டிங்கில் குடித்துவிட்டு ரகளை செய்வதும், ஷுட்டிங்குக்கு தாமதமாக வருவதுமாக அட்டகாசம் செய்துள்ளார், அப்படத்தின் ஹீரோ ஜானி டெப்.

தனது நுணுக்கமான நடிப்பாலும், அசைவுகளாலும் உலக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஜானி டெப். பைரட்ஸ் ஆப் தி கரீபியன் படம் இதுவரை 4 பாகங்கள் வெளிவந்துள்ளன. அத்தனை பாகங்களும் சூப்பர் ஹிட் ஆனது என்று சொன்னால் அதற்கு முக்கிய காரணம், ஜானி டெப்தான். பைரட்ஸ் ஆப் தி கரீபியன் படங்கள் அனைத்தும் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது.

இந்த நிலையில் ஜானி டெப் ஷூட்டிங்கில் ரகளை செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது தொடர்ந்து படப்பிடிப்பு தாமதமாக வந்துள்ளார், ஜானி. இதனால் நூற்றுக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அடிக்கடி குடித்துவிட்டு தன் மனைவியுடன் சண்டையிடுவதும், ரகளை செய்வதுமாக இருந்துள்ளார் என்று படப்பிடிப்புக் குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

எது எப்படியோ இந்தப் படம் வருகின்ற மே 24 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com