[X] Close

வசூலே பிரதானம் என செயல்படும் ஆட்சி: ஸ்டாலின்

Minister-Saroja-Issue-Stalin-Condemns

வாக்களித்த மக்களை வஞ்சித்து வசூல் மட்டுமே பிரதானமாக கருதி இந்த ஆட்சி செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், பெண் அதிகாரியை லஞ்சம் கேட்டு மிரட்டியதாக கூறப்படும் புகாரில் அமைச்சர் சரோஜாவை முதலமைச்சர எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவையிலிருந்து உடனடியாக பதவி நீக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்

அமைச்சர் சரோஜாவை பதவியிலிருந்து நீக்குவது மட்டுமல்லாமல் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். பெண் அதிகாரி என்றும் பாராமல் அமைச்சர் லஞ்சம் கேட்டு மிரட்டுவதை பார்த்தால் அமைச்சர்களோ ஆளும் கட்சி எம்எல்ஏக்களோ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் இல்லை என தெரியவருவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வாக்களித்த மக்களை வஞ்சித்து வசூல் மட்டுமே பிரதானமாக கருதி இந்த ஆட்சி செயல்பட்டு வருவதாகவும் ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close