மேகாலயாவில் சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை நிறுத்திக்கொள்ள அம்மாநில அரசுக்கு உச்சநீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.
மேகாலயாவில் உள்ள கிழக்கு ஜைண்டியா மாவட்டத்தில், கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி சட்டவிரோத சுரங்கத்தில் நிலக்கரி எடுக்க, 15 தொழிலாளர்கள் சென்றனர். மழை வெள்ளம் காரணமாக அருகில் இருந்த லைத்தின் ஆற்றின் தண்ணீர், சுரங்கத்துக் குள் புகுந்தது. இதனால் ’எலி வளை சுரங்கம்’ எனப்படும் சிறிய வாசலை கொண்ட சுரங்கத்துக்குள், நுழைந்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணியில், தேசிய பேரிடர் மீட்புக் குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, கடற்படை, தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை விரைவாக மீட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்தன.
சுரங்கத்துக்குள் தண்ணீர் வற்றாததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணி நடந்து வந்த நிலையில் மேலும் இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் மீட்பு பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் மேகாலயா அரசின் சார்பில் மீட்பு பணியை நிறுத்திக்கொள்ள அனுமதி கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மீட்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. இதனால் மீட்பு பணிகளை நிறுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து 7 மாதமாக நடந்து வந்த மீட்பு பணி நிறுத்துக்கொள்ளப்படுகிறது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்