பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தன் மீதான மோசடி புகாரை மறுத்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா. இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள். தமிழில், ’லிங்கா’ படத்தில் ரஜினி காந்த் ஜோடியாக நடித்திருந்தார். இவர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி, டெல்லியில் நடந்த’இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் பணம் வாங்கியிருந்தாராம்.
அவருக்கு நான்கு தவணைகளில் ரூ.24 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ’ஆனால், கடைசி நிமிடத்தில் நிகழ்ச்சிக்கு வர அவர் மறுத்துவிட்டார். இதனால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை’ என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் போலீஸ் ஸ்டேஷனில், புகார் கொடுத்தனர். போலீசார், சோனாக்ஷி சின்ஹா உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த மோசடி வழக்கு தொடர்பாக சோனாக்ஷி சின்ஹாவை விசாரிக்க மும்பையில் உள்ள அவர் இல்லத்திற்கு உத்தரப்பிர தேச காவல் துறையினர் நேற்று முன் தினம் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இந்நிலையில் தன் மீதான புகாரை சோனாக்ஷி மறுத்துள்ளார். யாரோ ஒருவர் கூறும் அபாண்டமான புகாரை நம்பாதீர்கள் என்றும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கில் காவல்துறைக்கு முழு ஒத்து ழைப்பு தரத் தயாராக இருப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!