தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கு ஜூலை 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இப்பதவிகளுக்கு திமுக சார்பில் வில்சன், சண்முகம், திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக சார்பில் முஹம்மத் கான், சந்திரசேகர், அதிமுக ஆதரவுடன் பாமகவின் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா என்ற சந்தேகம் இருந்ததால் திமுகவின் இளங்கோவும் வேட்பனுத் தாக்கல் செய்திருந்தார். இதனிடையே வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்ட காரணத்தினால், திமுகவின் இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இதனையடுத்து 6 பதவிகளுக்கு 6 பேர் தான் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்ததால், மனுத் தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். இந்தத் தகவலை சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Loading More post
திட்டமிட்டபடி மே 21-ல் குரூப் 2 தேர்வு! ஜூன் இறுதியில் ரிசல்ட்! டிஎன்பிஎஸ்சி தலைவர் பேட்டி
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
‘கெட்ட கனவுகள் வருது; தூங்க முடியவில்லை’-திருடிய கோயில் சிலைகளை திருப்பி வைத்த திருடர்கள்!
”கார்த்தி சிதம்பரம் இடங்களில் சோதனை நடத்துவது ஏன்?” - சிபிஐ கொடுத்த விளக்கம்!
பயனர்களின் சட்டப்பூர்வ பெயரைக் காண்பிக்க வாட்ஸ்அப் முடிவு!
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்