
சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 456 ரூபாய் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை திடீர் உயர்வு மற்றும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் 456 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு 57 ரூபாய் விலை உயர்ந்து 3 ஆயிரத்து 327 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு சவரன் 456 ரூபாய் விலை அதிகரித்து 26 ஆயிரத்து 616 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு 30 காசுகள் விலை உயர்ந்து 41 ரூபாய் 30 காசுகளுக்கு விற்பனையாகிறது. பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியை 10 சதவிகிதத்திலிருந்து 12 புள்ளி 5 சதவிகிதமாக அதிகரித்தது உள்ளிட்ட காரணங்களே விலை ஏற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.