Published : 11,May 2017 07:09 AM

பாஜகவை எப்படி அழைக்க முடியும்? ஸ்டாலின் கேள்வி

stalin-refuses-to-call-bjp

திராவிட இயக்கத்தை ஒழிப்போம் எனக் கூறும் பாஜக தலைவர்களை, திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவிற்கு எப்படி அழைக்க முடியும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வினவியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின், செய்தியாளர்களை சந்தித்த அவர் இதைத் தெரிவித்தார். மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் பற்றி ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை என ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் ஊழல் புரிவதிலும், லஞ்சம் வாங்குவதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் வைரவிழாவை குறுகிய வட்டத்தில் அடைக்காமல் அனைவரையும் அழைக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஸ்டாலின் இன்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்