[X] Close

பாசக்கார பய! மைதானத்துக்குள் புகுந்த ரசிகரால் பரபரப்பு

raina-fan

ரெய்னாவிடம் ஆட்டோகிராப் வாங்குவதற்காக மைதானத்துக்குள் புகுந்த ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் நேற்று மோதின. கான்பூரில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி. 195 ரன்கள் எடுத்தது. பின்னர் டெல்லி அணி ஆட, பீல்டிங் செய்துகொண்டிருந்தது குஜராத்.

போட்டியை ஏராளமான ரசிகர்கள் ரசித்துகொண்டிருந்தனர். சுரேஷ் ரெய்னா பீல்டிங் செய்துகொண்டிருந்தார். நான்காவது ஓவரின் மூன்றாவது பந்தை சங்வான் வீச ஆயத்தமானார். அப்போது பலத்த பாதுகாப்பையும் மீறி மைதானத்துக்குள் புகுந்த பாசக்கார ரசிகர் ஒருவர், ரெய்னாவிடம் சென்று அவர் கையை பிடித்துக் குலுக்கினார். பின்னர் தரையில் குத்த வைத்துக்கொண்டு ஒரு பேப்பரில் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டார். இதை எதிர்பார்க்காத ரெய்னா, அந்த ரசிகரை, ’இது முறையல்ல, இப்படி வருவது தவறு’ என்று சொல்லி, மைதானத்துக்கு வெளியே போகச் சொன்னார். கூட அம்பயரும் சேர்ந்து அந்த ரசிகரை வெளியே கொண்டு விட்டனர்.


Advertisement

இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags : raina

Advertisement

Advertisement
[X] Close