அம்மி கல்லை போட்டு மகனை கொலை செய்த தந்தை !

அம்மி கல்லை போட்டு மகனை கொலை செய்த தந்தை !
அம்மி கல்லை போட்டு மகனை கொலை செய்த தந்தை !

தாம்பரம் அருகே குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட மகனை பெற்ற தந்தையே தலையில் அம்மி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ஆறுமுகனார் தெருவை சேர்நதவர் உதயகுமார்(61). இவரது மகன் மணிகண்டன்(24), அப்பகுதியில் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தச் சூழலில் மணிகண்டன் தினமும் இரவு குடித்து விட்டு வந்து தந்தையுடன் ரகளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன், வழக்கம் போல் தந்தை உதயகுமாருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த உதயக்குமார் தனது மகன் என்று கூட பாராமல் ஆழந்த உறக்கத்தில் இருந்த தனது மகன் தலையில் அம்மிகல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தார்.அதில் தலையில் பலத்த காயமடைந்த மணிகண்டன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் போலீசார் உதயகுமாரை கைது செய்து, மணிகண்டன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தை உதயகுமாரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com