அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் ? துரைமுருகன் கேள்வி

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் ? துரைமுருகன் கேள்வி
அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என பல கட்சிகளை ஏன் அழைத்தீர்கள் ? துரைமுருகன் கேள்வி

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று நீங்கள் எந்த வகையில் பல கட்சிகளை அழைத்தீர்கள் என்று தெளிவுப்படுத்த முடியுமா என்று சட்டபேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார் இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதனால் தான் அனைத்து கட்சிகளையும் அழைத்ததாக பதிலளித்தார். 

அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் அனைத்து கட்சிகளையும் அழைக்க கூறவில்லை. 69 சதவீத இட ஒதுக்கீடு ஜெயலலிதா அறிவித்த போது திராவிட இயக்கத் தலைவர் வீரமணி அவருக்கு விருது வழங்கினார். எனவே அவரை அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தெரிவித்தேன். ஆனால் நீங்கள் அனைத்து கட்சியையும் அழைத்தீர்கள். அதை நான் தவறு கூறவில்லை.ஆனால் ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ள கட்சிகளை அழைத்த நீங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய ஜனநாயக கட்சி, மனித நேய மக்கள் கட்சிகளை எல்லாம் அழைக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். மேலும் இந்திய ஜனநாயக கட்சி உறுப்பினர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இருக்கிறார் மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்தவர்கள். அவர்களை எல்லாம் அழைக்காமல் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளை அழைத்தது எந்தவிதத்தில் சரியாகும் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர்,அப்படி கூப்பிட வேண்டும் என்றால் 80 கட்சிகளை கூப்பிட்டு ஒரு நாள் முழுவதும் விவாதம் நடைபெற்று இருக்கக் கூடும் என்றார். சில கட்சிகள் தாழ்த்தப்பட்ட மக்களை பிரதிநிதிப்படுத்தும் வகையில் இருப்பதால் அவர்களின் கருத்துகளும் இந்த விவகாரத்தில் சரியாக இருக்கும் என நினைத்து கூப்பிட்டோம் என்றார். அப்போது குறிக்கிட்ட துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்காலத்தில் இதுபோல் விஷயங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளப்படும் என பதிலளித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com