பச்சை பட்டு சாத்தி அத்திவரதரை தரிசித்த துர்கா ஸ்டாலின் !

பச்சை பட்டு சாத்தி அத்திவரதரை தரிசித்த துர்கா ஸ்டாலின் !
பச்சை பட்டு சாத்தி அத்திவரதரை தரிசித்த துர்கா ஸ்டாலின் !

காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு பச்சை பட்டாடை மற்றும் மாலைகள் சாத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் அத்திவரதரை தரிசனம் செய்தார். 

உலகப் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு எழுந்தருளி அத்திவரதர் அருள்பாலித்து வாருகிறார். இந்தியா முழுவதும் பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் வெளிநாடுகளில் இருந்தும் அத்திவரதரை காண பலர் வரத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தார். 

அத்திவரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபத்திற்கு சென்ற அவர் சுவாமிக்கு பச்சை நிற பட்டாடை மற்றும் பல வண்ண பூக்களால் கோர்க்கப்பட்ட பெரிய மாலையை சாத்தினார். பின் அத்தி வரதர் முன்பு துர்கா ஸ்டாலின் அமர்ந்து வழிபட்டார். அப்போது அத்திவரதருக்கு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.தொடர்ந்து சுவாமியின் வரலாற்றை கோவிலில் உள்ளவர்களிடம் துர்கா ஸ்டாலினிடம் சுருக்கமாக எடுத்துரைத்தனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com