தோனி மீதான மரியாதை வானளாவியது: விராட் கோலி புகழாரம்

தோனி மீதான மரியாதை வானளாவியது: விராட் கோலி புகழாரம்
தோனி மீதான மரியாதை வானளாவியது: விராட் கோலி புகழாரம்

தோனி மீதான மரியாதை என்றும் வானளாவியது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையே இன்று நடைபெறவுள்ள உலகக் கோப்பையின் முதல் அரையிறுதி போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மான்செஸ்டர் நகரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தோனி மீதான மரியாதை என்றும் வானளாவியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் பத்தாண்டுகளுக்கும் மேல் கேப்டனாக இருந்த அதே அணியில் தற்போது சக வீரனாக விளையாடும் போதும் எந்த ஒரு அதிகாரத்தையும், பிடிவாத குணத்தையும் தோனி வெளிப்படுத்தியதில்லை என கோலி குறிப்பிட்டுள்ளார். 

அணியின் வீரர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும் விளங்கி வரும் தோனி, இத்தனை வருடங்கள் அணியை கட்டமைத்த விதமே இந்திய அணி தற்போது பெற்றுள்ள உச்ச மரியாதைகளுக்கு காரணம் என கோலி தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com