டிவிட்டரில் அதிகம் ரீ டிவிட் என்ற பெருமையையும் கின்னஸ் சாதனையையும் முறியடித்துள்ளது ஓர் இளைஞரின் டிவிட் பதிவு.
பொதுவாக டிவிட்டர் பக்கத்தில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பதிவுகள், அவர்களின் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுவது வழக்கம். ஆனால் 16 வயது இளைஞரின் டிவிட் அதிகம் ரீடிவிட் செய்யப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசிப்பவர் கார்டர் வில்கெர்சன். அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்குச் சென்ற அவர், ’உங்க கடை சிக்கனுக்கு விளம்பரம் பண்றேன். அதுக்கு பரிகாரமா, எனக்கு ஃபிரியா சிக்கன் வேணும்’ என்று விளையாட்டாகக் கேட்டார். கடைக்காரர் நக்கலாக, ‘தினமும் சிக்கன் சாப்பிட்டுக்கோ. ஆனா, உன் விளம்பர டிவிட்டர், ஒரு கோடியே 80 லட்சம் ரீ டிவிட் ஆகணும். ஓகேவா?’ என்று சொன்னார். இந்த நக்கலை நிஜமாக்க முடிவெடுத்தார் கார்டர். என்ன ஆச்சரியம்! இவர் போட்ட டிவிட், கன்னாபின்னாவென்று ரீடிவிட் ஆகி, அவர் சொன்ன, ஒரு கோடியே 80லட்சத்தைத் தாண்டி விர்ரென பறந்தது. இப்போது கடைக்குப் போனார் கார்டர். ஏன்டா வாயைக் கொடுத்தோம் என்று நினைத்த ஓட்டல் உரிமையாளர், வேறு வழியில்லாமல், ’ஒரு வருஷத்துக்கு இங்கே உங்களுக்கு சிக்கன் ஃபிரி’ என்று சொல்லிவிட்டார். இந்த ஒரு வருட சிக்கனோடு, கின்னஸ் சாதனையும் செய்திருக்கிறது அந்த டிவிட். அப்படி அதில் என்ன வாசகம் இடம்பெற்றிருந்தது என்பது தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, எலென் டீஜெனெரஸ் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொகுப்பாளர் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வில் எடுத்த செல்ஃபி புகைப்படமே அதிகம் 3,430,270 ரீடுவிட் செய்யப்பட்டு சாதனை படைத்தது குறிப்பிடதக்கது.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி