மணமக்களுக்கு பரிசளிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் !

மணமக்களுக்கு பரிசளிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் !
மணமக்களுக்கு பரிசளிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் !

சென்னையில் நடைப்பெற்ற திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு விதவிதமான பரிசுகளுடன் 5 லிட்டர் தண்ணீர் கேனை நண்பர்கள் பரிசாக கொடுத்துள்ளனர். 

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தண்ணீர் பிரச்னை ஏற்ப்ட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் சிலர் அல்லாடி வருகின்றனர். மேலும் நாட்டில் 17% நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிக பட்ச தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. 

இந்நிலையில் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு விதவிதமான பரிசுகளுடன் தண்ணீர் கேனையும் பரிசாக அளித்துள்ளனர். தற்போது அளிக்கப்படும் பரிசுகளில் விலை மதிப்பில்லாதவையாக கருதப்படுபவை தண்ணீர் கேன்களும் ஒன்று தான். காரணம் சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையே. சென்னையை அடுத்த அம்பத்தூரில் நேற்று நடந்த திருமண வரவேற்பு விழாவில், திருமண ஜோடிகளுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் தலா 5 லிட்டர் தண்ணீர் கேனை பரிசாக வழங்கினர். இதனால் மண்டபத்தில் சிரிப்பலை எழுந்தது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் சிக்கனத்தை அது உணர்த்துவதாக இருந்தது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com