Published : 08,Jul 2019 06:25 AM

சட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்ப்பதா? ஸ்டாலின் 

stalin-condemned-in-assembly-about-neet-exam-bill-reject

நீட் மசோதாக்கள் நிராகரிப்புக்கு மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு நீட் தேர்வு தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அப்போது, நீட் மசோதாக்கள் நிராகரிப்புக்காக மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனவும்  அது அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் கொண்டு வரவேண்டும் ஸ்டாலின் வலியுறுத்தினார். 

மேலும் 27 மாதங்களாக கிடப்பில் போடப்பட்ட மசோதாக்களை நிராகரித்திருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதுபோல் மாநில அரசுக்கும் உண்டு எனவும் குறிப்பிட்டார். சட்டப்பேரவையின் ஆணிவேரை அசைத்து பார்த்த மத்திய அரசின் செயலை கண்டிக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்