கர்நாடக அரசியலில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அக்கட்சியின் தலைவர் சித்தராமையா கடிதம் அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்த எம்எல்ஏக்கள், அமைச்சர் பதவி கிடைக்காததால், அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் 13 பேர் நேற்று சபாநாயரை சந்தித்தனர். அவர்களில் 12 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பைக்கு சென்று நட்சத்திர ஓட்டலில் தங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து குமாரசாமியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக பாஜக அவர்களை மறைத்து வைத்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அதனை மகாராஷ்ட்ரா பாஜக திட்டவட்டமாக மறுத்ததுடன், எம்எல்ஏக்கள் மும்பை வந்தது தங்களுக்கு தெரியாது என்றும் கூறியது.
இந்தச் சூழலில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக பாஜக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா, இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். தற்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டிப்பதை அடுத்து, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையாக மூத்தத் தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து நாளை மறுநாள் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை கூட்டியிருக்கும் சித்தராமையா, இதில் பங்கேற்காத எம்எல்ஏக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'