நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை

நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை
நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு - திங்கட்கிழமை விசாரணை

நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி மூன்று துணை நடிகர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ம் தேதி நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின் உள்பட மூன்று பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் வாக்குகள் வராததால், சென்னைக்கு வந்து வாக்களிக்க முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டதாக மனுவில் கூறியுள்ளனர்.

மேலும் சங்க விதிகளின்படி, சென்னைக்கு வெளியில் வசிக்கும் உறுப்பினர்கள், தபாலில் மட்டுமே வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தங்களைப் போல பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதால் நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர். இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் ஜூலை 8-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. 

அதேசமயம், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கும் அன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில்தான் தேர்தலை ஜூன் 23 நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணாமல் பத்திரபடுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com