தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்துக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி தப்பிவிட்டார்.
அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்வதற்கு மறுத்துவிட்டார். இதன் காரணமாக அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனது நிறுவன பங்குகளை இங்கிலாந்தில் விற்று, கிடைத்த பணத்தில் 40 மில்லியன் டாலரை நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக தனது மகன், மகள்களுக்கு கொடுத்து நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கும் ஆளாகி உள்ளார்.
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மல்லையா குற்றவாளி என்றும், அவர் வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மல்லையா ஆஜராவதை உறுதி செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி