[X] Close

தினகரன் கைது விவரத்தை தாக்கல் செய்யாதது ஏன்?: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் கண்டனம்

TTV-Dhinakaran-Arrest-no-file-Submit-in-court

டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை 3 வாரங்களாகியும் அமலாக்கத்துறை சமர்ப்பிக்காதது ஏன் என எழும்பூர் குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். நாளை மறுநாளுக்குள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

டிடிவி தினகரன் மீதான அந்நியச் செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு 3 வாரங்களாகியும் அமலாக்கத்துறை அதனைத் தாக்கல் செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பிய நடுவர்மன்ற நீதிபதி வளர்மதி, அதற்கு கண்டனமும் தெரிவித்தார். நாளை மறுநாளைக்குள் தினகரன் கைது விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close