விழுப்புரத்தில் சொத்து தகராறு காரணமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அருகே மாத்தூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணபிள்ளை என்பவருக்கும் சண்முகபிள்ளை என்பவருக்கும் சொத்துதகராறு காரணமாக நடைபெற்று வந்த வழக்கில், கொலை செய்யப்பட்ட கிருஷ்ணபிள்ளை வெற்றி பெற்றுள்ளார். இதுதொடர்பான முன்விரோதம் காரணமாக சண்முகபிள்ளை ஆதரவாளர்களான பாஸ்கர், சரவணன் மோகனசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி, ஆதிகேசவன், ஆறுமுகம், பச்சைமுத்து, லட்சுமி ஆகிய 9 பேர் கிருஷ்ணபிள்ளையை கடந்த 2013ஆம் ஆண்டு கொலை செய்துள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட லட்சுமி உட்பட 9 பேர் மீதான வழக்கு திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 1ல் கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்நிலையில் இன்று நீதிபதி சுபத்ராதேவி கிருஷ்ணபிள்ளை கொலை வழக்கில் பாஸ்கர் என்கின்ற மாட்டுபாஸ்கர், மூதாட்டி லட்சுமி உள்ளிட்ட ஒன்பது பேருக்கு ஆயூள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
Loading More post
'ஒட்டுமொத்த நாட்டையே தீக்கிரையாக்கிய நுபூர் ஷர்மா' - உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
`சுதந்திர தினம், குடியரசு தினம் போலத்தான் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட நாளும்!’-ஆளுநர் கருத்து
”என் உடல் பலமாக இல்லைதான்; ஆனால் என் இதயம்..” - மனம் திறந்த நடிகை ஸ்ருதி ஹாசன்!
பினாமி பெயரில் இருந்த சசிகலாவின் சொத்துகள் - முடக்கிய வருமான வரித்துறை
`98.55% என்றானது கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம்!’- மத்திய அரசு தகவல்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide