தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியில் காதல் திருமணம் செய்த இளம் தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த சோலைராஜ்(24) என்பவர் விளாத்திகுளம் அருகே உள்ள பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி(21)ஆகிய இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். குளத்தூர் அருகே உள்ள உப்பளத்தில் இருவரும் கூலித் தொழிலாளிகளாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களது காதலுக்கு பெண் வீட்டு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனால், எதிர்ப்பை மீறி மூன்று மாதங்களுக்கு முன்பு சோலைராஜ், ஜோதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் பெண் வீட்டின் சார்பில் அவர்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மிரட்டல்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சோலைராஜ் மற்றும் ஜோதி ஆகிய இருவரும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக குளத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் ஜோடி இரட்டைக் கொலை சம்பவத்தால் குளத்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்