Published : 03,Jul 2019 02:35 PM
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நடிகை மீரா மிதுனுக்கு காவல்துறை சம்மன்

பிக் பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றுள்ள நடிகை மீரா மிதுனுக்கு சென்னை தேனாம்பேட்டை காவல்துறையினர் சம்மன் கொடுத்துள்ளனர்.
சென்னை தியாகராய நகரைச் சேர்ந்த ரஞ்சிதா என்பவருக்கும் நடிகை மீராமிதுனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை இருந்திருக்கிறது. எனவே, ரஞ்சிதா அளித்த புகாரின் பேரில், வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மீரா மிதுனுக்கு காவல்துறையினர் சம்மன் அளித்துள்ளனர். வழக்கு விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இந்நிலையில், பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றுள்ளதால் வெளியே வரமுடியாது என்றும், நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆஜராவதாகவும் மீரா மிதுன் பதில் அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே நடிகை வனிதாவின் மகள் அவருடன் தந்தையுடன் இருப்பாரா ? தாயுடன் இருப்பாரா என்ற பிரச்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இடையே நடைபெற்றுள்ளது.