Published : 10,May 2017 06:06 AM

டாஸ்மாக்கைத் திறக்க தமிழக அரசு மனு: நாளை விசாரணை

tasmac-opening-case

சாலையோரம் மூடப்பட்ட கடைகளை வேறு இடத்தில் திறக்கக்கூடாது என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இவ்வழக்கு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்பட உள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து தமிழகத்தில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த மதுபானக்கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து, அகற்றப்பட்ட

மதுபானக்கடைகளை குடியிருப்பு பகுதிகளில் திறக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி

வருகின்றனர். இதுதொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு

கிராமத்துக்குள்ளும், குடியிருப்பு பகுதிக்குள்ளும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை புதிய மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு கூடுதல் வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.

தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்