[X] Close

உலகக்கோப்பை தொடருடன் தோனி ஓய்வு? - பிடிஐ செய்தி நிறுவனம்

India-s-last-World-Cup-match-likely-to-be-MS-Dhoni-s-last

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு தோனி ஓய்வுபெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

இந்திய அணியைப் பொறுத்தவரை பெரும்பாலான நேரங்களில் தோனியை சுற்றியே பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கும். அவர் சிறப்பாக ஆடினாலும் சரி, மிக மோசமாக ஆடினாலும் சரி, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் அதிகமாக எழும். ஒவ்வொரு முறை விமர்சனங்கள் எழும் பொழுதெல்லாம் தன்னுடைய ஆட்டங்களால் பதிலளிப்பார் தோனி.


Advertisement

உலகக்கோப்பைக்கு முன்னதாகவே தோனி ஓய்வு பெறுவார் என தகவல்கள் வெளியாகின. இனிமேலும் அவர் ஓய்வு பெறுவதே சிறந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் அனைவருக்கும் தன்னுடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையால் அதற்கு அவர் பதிலடி கொடுத்தார்.

தோனியின் அனுபவம் உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு பெரிய உதவியாக இருக்கும் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனாலும் உலகக்கோப்பை தொடங்கியது முதல் தோனியின் மீது தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கும் கடைசி போட்டியோடு தோனி ஓய்வுபெறவுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தோனி தரப்பில் இருந்தோ பிசிசிஐ தரப்பில் இருந்தோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவராத நிலையில் பிடிஐ செய்தி நிறுவனம் தோனி ஓய்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ளது

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close