ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தினால் பொதுவிநியோக திட்டம் கடுமையாக பாதிக்கும் என்று திமுக சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய ஏ.வா.வேலு, “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல் உள்ளது. எல்லா மாநிலத்திலும் பொது விநியோக திட்டம் இருந்தாலும் வழங்கும் பொருட்களிலும், அளவுகளிலும் வித்தியாசம் உள்ளது. தமிழத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் ரேசன் பொருட்களை முழுமையாக வழங்க முடியாத நிலையில் இத்திட்டம் செயல்படுத்தினால், தமிழகத்திற்கு நிதி சுமை அதிகம் ஏற்படும்” என்றார்.
மேலும், “ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என மத்திய அரசு தெரிவிப்பது, வடமாநில இந்தி மொழி பேசும் மக்களை தமிழகத்தில் குடியேற வைத்து, நமது சலுகைகளை அவர்களுக்கு கிடைக்க வழிவகை செய்யும். மேலும் தமிழ்நாட்டை இந்தி பேசும் மாநிலமாக மாற்றுவதற்கு மத்திய அரசு முயற்சி செய்கிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரவுள்ள ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு, தேர்தல் கல்வி என அனைத்தும் மாநில சுயாட்சிக்கு எதிரானதாகவும், கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்ககூடியதாவும் உள்ளது. மேலும் அரசியலமைப்பு சட்டத்தை புதைத்து, மாநில சுயாட்சிக்கு வேட்டு வைக்கும் செயல்கள்” எனக் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் காமராஜ், தமிழ்நாட்டில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்று உறுதியளித்தார்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!