உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில் அதில் 5 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது.
தற்போது இந்திய அணி 11 புள்ளிகளுன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இன்று பங்களாதேஷ் உடன் இந்திய அணி மோதும் நிலையில், இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறிவிடும். அதனால் இந்திய அணி வீரர்கள் முனைப்புடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் கடைசியாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பந்துகளில் இங்கிலாந்து வீரர்கள் வெளுத்து வாங்கினார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் மாற்று வீர்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷ் அணியை எடுத்துக் கொண்டால் 3 வெற்றி, 3 தோல்வி மற்றும் 1 ஆட்டத்தில் முடிவில்லை என 7 புள்ளிகளுடன் இருக்கிறது. பங்களாதேஷ் அணி அரையிறுதிக்குள் நுழைய வேண்டும் என்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அவ்வணிக்கு ஏற்பட்டுள்ளது. எனவே நிச்சயம் இன்று நடைபெறும் ஆட்டம் அந்த அணிக்கு வாழ்வா..? சாவா..? ஆட்டம்தான். அதனால் தங்களால் முடிந்த அளவு திறமையை அந்த அணி வீரர்கள் வெளிக்கொண்டு வருவார்கள். அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்திய அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷ் அணியில் ஷகிப் அல் ஹசன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அமர்க்களம் செய்து வருகிறார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் 2 சதம் 3 அரை சதம் அடித்துள்ள அவர் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் நிச்சயம் சிம்ம சொப்பமான திகழ்வார் எனக் கருதப்படுகிறது. அதுமட்டுல்லாமல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சிறப்பாகவே இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் இதுவரை 35 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில் இந்திய அணி 29 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 5 ஆட்டங்களிலும் வெற்றி கண்டுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!