மகாராஷ்டிராவில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து 18 பேர் பலியாகினர். 13 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் 540 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதில் நேற்று மட்டும் ஒரே நாளில் 91.9 மில்லிமிட்டர் மழை பெய்துள்ளது. இதனையடுத்து மும்பை நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அத்துடன் ரயில் போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்து ஆகியவை ரத்தாகியுள்ளன. மேலும் மும்பை விமானநிலையத்தின் ஓடுதள பாதையும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதால் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த மழையால் பல ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் அடைந்து அவதிப்பட்டு வருகின்றனர். அத்துடன் இன்று மும்பை வரவேண்டிய 54 விமானங்களில் அருகிலுள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் இன்று அதிகாலை கிழக்கு மலாட் பகுதியில் குடிசைப்பகுதி ஒன்றில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியாகியுள்ளனர். மற்றும் 13 காயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியோரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெளியேற்றி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
அதேபோல இன்று அதிகாலை 12.30 மணியளவில் கல்யாண் பகுதியிலுள்ள பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் 3பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புனேவில் நள்ளிரவில் கல்லூரி ஒன்றில் சுவர் இடிந்ததில் 6 பேர் பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே மற்றும் பால்கர் பகுதியில் ஜூலை 2,4 மற்றும் 5ஆம் தேதிகளில் அதிகளவில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே மகாராஷ்டிராவில் பாதிப்புகள் அதிகமாக தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
Loading More post
ஐபிஎல் 2022: கடும் போட்டி - பிளே ஆஃப் செல்லும் அணிகள் எவை எவை?
ட்விட்டரில் ப்ளூ டிக் கோரிய முன்னாள் சிபிஐ அதிகாரிக்கு அபராதம் விதித்த டெல்லி நீதிமன்றம்!
மந்தைவெளி - பாரிமுனை பேருந்தில் நடத்துனரை வெளியே தள்ளிய 4 மாணவர்கள் கைது
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வு: இதுவரை 30 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு
பிடித்தால் பணியாற்றுங்கள்; இல்லை வெளியேறுங்கள் - பணியாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் அறிவுறுத்தல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்