விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் அரசு விரைவுப் பேருந்து மீது, பின்னால் வந்த கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 3 பேர் உயிழந்தனர்.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவுப் பேருந்து ஒன்று, விருதுநகர் நான்கு வழிச்சாலை அருகே உள்ள அரசுப் போக்குவரத்து பணிமனை அருகே நின்றிருக்கிறது. பின்னர் வண்டியை எடுக்க ஆரம்பித்த பேருந்து ஓட்டுநர், அப்போதுதான் பேருந்தை மெதுவாக இயக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த நேரத்தில் மதுரையிலிருந்து நெல்லை நோக்கி வந்த கார் ஒன்று பேருந்தின் பின்புறத்தில் வேகமாக மோதியது. அதிகாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில் காரில் இருந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ராஜவேல் முருகன், கமலம், சுப்பிரமணியன் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன் கார் ஓட்டுநர் ஐயப்பன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கர்நாடகாவில் 2 காங். எம்எல்ஏக்கள் ராஜினாமா - குமாரசாமி அரசுக்கு நெருக்கடி?
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி அரசுப் பேருந்துக்கு அடியில் சிக்கிய காரை அப்புறப்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டனர். இதனைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் காரில் பயணித்தவர்கள் பொள்ளாச்சி அடுத்த ஜல்லிப்பட்டியை சேர்ந்தவர்கள் எனவும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் நோக்கிச் சென்றதும் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் ஆய்வு நடத்தினார். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பாண்டியன் நகர் போலீசார் விசாரணை நடத்தியதில் கார் அதிவேகமாக வந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்