அத்திவரதரை நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம்

அத்திவரதரை நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம்
அத்திவரதரை நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம்

காஞ்சிபுரம் வரதாதராஜ பெருமாள் கோவிலில் வீற்றிருக்கும் அத்திவரதரை நாளை முதல் இலசவமாக தரிசிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அத்திவரதரை தரிக்க வசூலிக்கப்பட்ட சிறப்பு கட்டணமான ரூ.50 ரத்து செய்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும், அத்திவரதர் திருவிழா இன்று தொடங்கியுள்ளது. அத்திவரதரை தரிசிப்பதற்காக பல இடங்களிலும் இருந்து பக்தர்கள் காஞ்சிபுரம் வரத் தொடங்கியுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் எடுக்கப்படுவார். 

பின்னர் 48 நாட்களுக்கு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடைசியாக கடந்த 1979-ஆம் ஆண்டு அத்திவரதரைத் தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அத்திவரதர் திருவிழா தொடங்கியுள்ளது. இன்றுமுதல் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை 48 நாட்கள், பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம்.

முன்னதாக அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து அத்திவரதர் கடந்த 28-ஆம் தேதி எடுக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வைக்கப்பட்ட அத்திவரதருக்கு தைலக்காப்பு, சிறப்பு பூஜைகள் செயப்பட்டன. அதிகாலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் மாலை 5 மதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com