Published : 09,May 2017 01:08 PM

'டாய்லட் - ஒரு காதல் கதை'யைக் கேட்டு சிரித்த மோடி

Akshay-Kumar-Meets-PM-Narendra-Modi--Tells-Him-About-His-Film-Toilet--Ek-Prem-Katha

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது அடுத்த படமான ‘டாய்லெட் - ஏக் பிரேம் கதா’ குறித்து பேசினார். இந்த படத்தின் தலைப்பை கேட்டவுடன் மோடி சிரித்ததாக அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் பின்னணியில் நடக்கும் காதல் கதைதான் ‘டாய்லெட் ஏக் பிரேம் கதா’ திரைப்படம். தனது இந்த திரைப்படம் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியாதாக அக்ஷய் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ‘டாய்லட் - ஒரு காதல் கதை’ என்ற வேடிக்கையான தலைப்பைக் கேட்டு பிரதமர் மோடி சிரித்ததாகவும், அது தன்னுடைய நாளை பிரகாசமாக்கியதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்