ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அங்கிருந்து தென்கொரியா எல்லைக்கு சென்று வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார்.
ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் வருகை தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜேவை சந்தித்த ட்ரம்ப் பின்னர் அவருடன் வடகொரிய தென்கொரிய எல்லைக்கு சென்றார். அங்கு எல்லையை கடந்து, வடகொரியா அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிக்கு சென்ற ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து கைகுலுக்கினார். இதனால் வடகொரிய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார்.
இந்த பகுதிக்கு வருவதில் பெருமை கொள்வதாக தெரிவித்த ட்ரம்ப் நிறைய நல்ல விஷயங்கள் நடப்பதாக கூறினார். ட்ரம்பின் இந்த பயணம் இரு நாட்டு உறவில் முக்கிய மைல்கல் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்தார். அமெரிக்கா - வடகொரியா இடையே நீண்ட ஆண்டுகள் பகை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இதனை தொடர்ந்து வியட்நாமில் இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பு நடைப்பெற்றது. மேலும் ட்ரம்ப் வடகொரியாவுக்கு சென்று கிம் ஜாங் உன்னை, சந்தித்திருப்பது வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
Loading More post
கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!
"26 மாவட்டங்கள் பாதிப்பு, 1089 கிராமங்கள் மூழ்கின" - அசாம் வெள்ளத்தின் கோரதாண்டவம்
`சிதம்பரம் கோயில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபடலாம்'- அராசணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்