Published : 29,Jun 2019 06:15 AM

பாலியல் புகாரில் சிக்கிய பேராசிரியர் கந்தசாமி மீது குற்ற வழக்குப்பதிய மனு

Sexual-Harassment-complaint-on-Professor

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், உதவிப் பேராசிரியர் கந்தசாமி மீது குற்ற வழக்குப்பதிவு செய்யக்கோரி முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் சுகாதாரத்துறைக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவில் மருத்துவராகவும் உதவி பேராசிரியராகவும் இருந்து வந்தவர் கந்தசாமி. இவர் மாணவிகளுக்குப் போதை மருந்து கொடுத்து பின்னர் தனது குடியிருப்புக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

மேலும், அதனைத் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வருவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் புகார் மனு அளித்தனர்.

ஆவடி அருகே சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி? - போலீசார் தகவல்   

இது குறித்து கடந்த 15-ஆம் தேதி புதிய தலைமுறைக்கு தகவல் அளித்த மருத்துவக் கல்லூரி டீன் பாலசுப்பிரமணியம், பாலியல் புகார் தொடர்பாக விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து உதவிப் பேராசிரியர் கடந்த 21-ஆம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அதிசயகுமார் என்பவர், மருத்துவர் கந்தசாமி மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனக்கோரின முதல்வரின் மக்கள் குறைத்தீர்க்கும் பிரிவு மற்றும் சுகாதாரத்துறைக்கு மனு  அளித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்