Published : 09,May 2017 06:48 AM
முன்னாள் ரவுடியை வெட்டிக்கொன்ற நண்பர்கள்!

முன்னாள் ரவுடியை வெட்டிக்கொன்ற நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரி குருமாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகன் என்ற ஜெகன்நாதன். இவர் பா.ஜனதா கட்சியின் வில்லியனூர் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். ஜெகன் நேற்று இரவு 7 குருமாம்பேட்டை சந்திப்பில் இருந்து மொபட்டில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல், ஜெகனை வழிமறித்து அரிவாளால் வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட ஜெகன் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர் இளவரசன் உட்பட அவரது நண்பர்கள் முத்து, வெற்றி , கார்த்திக் மற்றும் ராஜு உட்பட 5 பேரை மேட்டுப்பாளையம் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, அரிவாள், இரண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.