[X] Close

பகலில் வெயில்.. மாலையில் சாரல் மழை - தண்ணீரை சேமிக்கும் சென்னை மக்கள் 

Rain-hits-chennai-again-today---people-started-to-save-rain-water

சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், போரூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. 

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்கிறது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் தொடர்ச்சியாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று இரவு 10 மணியளவில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சில நிமிடங்களிலே மழை பெய்து மண்ணை குளிர்ச்சியூட்டியது. 

             


Advertisement

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலையும் லேசான மழை பெய்தது. சென்னையில் வடபழனி, அரும்பாக்கம், சூளைமேடு, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, கோயம்பேடு, மதுரவாயல், பெரம்பூர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது. 

                     

நேற்று இரவும் மழை பெய்த போதும், இன்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகலில் வெயில் இருந்த நிலையில், மாலையில் சாரல் மழை பெய்தது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வரும் மக்கள் தற்போது பெய்து வரும் மழையை சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர். மழை பெய்யும் போது வீட்டில் உள்ள பாத்திரங்களில் தண்ணீரை மக்கள் பிடித்து வைக்கிறார்கள். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close