Published : 27,Jun 2019 03:06 PM

“ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்கக்கூடாது” - மு.க.ஸ்டாலின்

Central-Government-don-t-allow-to-Hydrocarbon-Schemes-in-Tamil-Nadu---MK-Stalin

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 6 மாவட்டங்களில் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு பிடுங்கி எறியும் விதத்தில், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி கேட்பது மிகுந்த கவலை அளிப்பதாக கூறியுள்ளார். 

தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் விதத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். காவிரி நதிநீர் பிரச்னையையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், காவிரி ஆணையத்துக்கு உடனடியாக நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதுவரை ஆணையம் போட்டுள்ள இரு உத்தரவுகளின் அடிப்படையில் 40 புள்ளி 43 டி எம் சி நீரை திறந்துவி்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்