[X] Close

சர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானை.. தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்தது வனத்துறை..!

Forest-Officers-brought-under-Andaman-elephant

சர்ச்சையில் சிக்கிய அந்தமான் யானையை, நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மதுரை வனத்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.


Advertisement

2007-ஆம் ஆண்டு அந்தமான் பகுதியிலிருந்து ‘மலச்சி’ என்ற யானை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனிடையே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட யானையை லட்சுமணன் என்பவர், பிச்சை எடுக்க மற்றும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க பயன்படுத்துவதாக வனவிலங்கு ஆர்வலர் முரளி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுத்தார். இதில் உத்தரவு வழங்கிய உயர்நீதிமன்றம், லட்சுமணனுக்கு யானை தொடர்பான உரிய ஆவணம் இல்லை எனக் கூறி, மலச்சி யானையை யானைகள் காப்பகத்தில் வைக்க உத்தரவிட்டனர்.


Advertisement

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. தொடங்கிய சில நிமிடங்களிலேயே காலி..! 

இதனைத்தொடர்ந்து மதுரை தென்பழஞ்சி பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாக உரிய அனுமதி இல்லாமல் கோவிலுக்கு எனக் கூறி லட்சுமணன் வைத்திருந்த யானையை, மதுரை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். யானைக்கு உரிய முறையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்ற பின்பு திருச்சி அல்லது கோயம்புத்தூரில் உள்ள யானைகள் பாதுகாப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

கடந்த சில தினங்களுக்கு முன்பு உரிய அனுமதி இல்லாமல் 5 யானைகளை மதுரையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தியதாக எழுந்த புகாரில் லட்சுமணன் வைத்திருந்த யானையும் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close