[X] Close

தப்பியது ஹைதராபாத்: மும்பையை வீழ்த்தியது

hyderabad-walks-out

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஹைதராபாத் அணி ஏழாவது வெற்றியை ஈட்டியது. மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி கண்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை அணியும் ஹைதராபாத் அணியும் நேற்று மோதின. டாஸ் ஜெயித்த மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் ஷர்மா 45 பந்துகளில் 67 ரன்கள் விளாசினார். பார்த்திவ் பட்டேல் 23 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் தரப்பில் சித்தார்த் கவுல் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

139 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, தவான், ஹென்ரிகஸ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 10 பந்துகள் மீதமிருந்த நிலையில் ஹைதராபாத் அணி எட்டியது. ஹென்ரிகஸ் 35 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ஷீகர் தவான் 46 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது.


Advertisement

12 போட்டிகளில் விளையாடி, 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருந்த ஹைதராபாத் அணி, அடுத்தச் சுற்றுக்குச் செல்ல வேண்டுமென்றால், ஆட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. இதனால் நேற்றைய போட்டி, அந்த அணிக்கு வாழ்வா சாவா போட்டியாக இருந்தது. மும்பை அணியை வென்றதை அடுத்து அடுத்த சுற்று வாய்ப்பை ஹைதராபாத் தக்க வைத்துள்ளது.

Related Tags : ipl hyderabadhyderabad ipl

Advertisement

Advertisement
[X] Close